News February 23, 2025
₹700 கோடி பட்ஜெட்டில் மகாபாரத படம்: லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி அடுத்ததாக ₹700 கோடி பட்ஜெட்டில் புராண திரைப்படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜுனன் என 2 பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இவர் கடைசியாக இயக்கி ‘தி வாரியர்’ படம் ஃபிளாப் ஆனது.
Similar News
News February 24, 2025
ஜெ., பிறந்தநாளுக்கு அரசு சார்பில் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவரின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. மெரினாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஜெ., பிறந்தநாளில் ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு உதவிச் செய்ய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
News February 24, 2025
விவாகரத்து வேண்டுமா..! இந்த கோயிலுக்கு கிளம்புங்க

நம் ஊரில் கல்யாணம் ஆவதற்காக கோயிலுக்கு செல்வார்கள். ஆனால், ஜப்பானியர்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள ஒரு கோயிலுக்கு சென்று வேண்டுகிறார்கள். அந்நாட்டின் கியோட்டோ என்ற இடத்தில் உள்ள ‘யாசுய் கொன்பிரகு’ கோயிலுக்கு சென்று ஜபித்தால் போதும் உடனே விவாகரத்து தான் என அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். எவ்வளவு பெரிய பஞ்சாயத்தாக இருந்தாலும், சுமூகமாக mutual divorce கிடைக்குமாம். இப்படியும் சில நம்பிக்கைகள்.
News February 24, 2025
இந்தியாவில் இத்தனை அதிசயங்களா?

உலகளவில் எந்தெந்த நாடுகளில் அதிகளவு UNESCO கலாசார தளங்கள் இருக்கிறதென்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில், முதலிடத்தில் 60 தளங்களுடன் இத்தாலி உள்ளது. 43 தளங்களுடன் இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது. அவற்றில், தாஜ் மகால், அஜந்தா குகைகள் ஆகியவையும் அடங்கும். தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மகாபலிபுரம், நீலகிரி மலை ரயில் ஆகியவை இப்பட்டியலில் உள்ளன.