News February 23, 2025
மாத்திரை அட்டைகளில் சிவப்பு கோடு இருந்தால்…

மருந்து அட்டைகளில் இருக்கும் இந்த குறியீடு மிகவும் முக்கியமானது. சிவப்பு கோடு இருக்கும் மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளவே கூடாது என மத்திய அமைச்சகம் அறிவுறுத்துகிறது. இந்த சிவப்பு கோடு, Antibiotics மருந்துகளில் காணப்படும். ஆகவே, மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், உடல்நல பிரச்னைகள் வரக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
Similar News
News February 23, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் ஜேசன் காலமானார்

ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான பீட்டர் ஜேசன்(80) காலமானார். அவரது மரணத்துக்கான காரணம் பற்றி தகவல் வெளியாகவில்லை. 1960களில் அறிமுகமான இவர் டெட்வுட், கராத்தே கிட் போன்ற படங்களால் பிரபலமானார். இதுவரை 270 படங்கள், தொடர்களில் நடித்துள்ள இவர் சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படுகிறார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News February 23, 2025
குல்தீப் 300, ஹர்திக் 200

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். குல்தீப் 300 விக்கெட்டுகளையும், பாண்ட்யா 200 விக்கெட்டுகளையும் 3 வடிவங்களிலும் எடுத்துள்ளனர். குல்தீப் ODIல் 176, T20ல் 69, டெஸ்டில் 56 விக்கெட்டுகளையும், பாண்ட்யா T20ல் 94, ODIல் 89, டெஸ்டில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். T20 ஆல்ரவுண்டர் பட்டியலில் பாண்ட்யா முதலிடத்தில் உள்ளார்.
News February 23, 2025
பாண்ட்யா வாட்ச்சின் விலை ரூ.7 கோடியா? ஆத்தாடி!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் பாண்ட்யா பந்துவீசியபோது கையில் ஒருவகை வாட்ச் அணிந்திருந்தார். அந்த வாட்ச், மிகச் சிலரிடமே இருக்கும் விலை அதிக மதிப்புடைய Richard Mille RM 27-02 வாட்ச் என்று தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் ரூ.7 கோடி என்றும் அந்தத் தகவல் கூறுகிறது. உங்கள் வாட்ச்சின் விலை என்ன?