News February 23, 2025
நாதகவில் மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகல்

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தலைமை சரியாக இல்லாததால் சரியான பாதையில் செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர், தனது ஆதரவாளர்கள் 300 பேருடன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். NTKவில் இருந்து அடுத்தடுத்து பலரும் விலகி வரும் நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என சீமான் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News February 23, 2025
இதில் எது சிறுத்தை தெரியுமா?

இந்த மூன்றில் முதலில் இருக்கும் Leopardஐதான் நாம் பொதுவாக சிறுத்தைப் புலிகள் என்று அழைக்கிறோம். இவைதான் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்றன. இரண்டாவதாக இருக்கும் சிவிங்கிப் புலி (Cheetah) ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்பவை. இவைதான் உலகின் வேகமான விலங்கு. மூன்றாவதாக இருக்கும் ஜாகுவார்கள் அமெரிக்க நாடுகளில் அதிகமாக வாழ்கின்றன. இந்த மூன்றில் உங்களுக்கு பிடித்த விலங்கு எது?
News February 23, 2025
51ஆவது சதம் விளாசினார் விராட் கோலி

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் 3ஆவது விக்கெட்டுக்கு காேலி களமிறங்கினார். முதலில் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். பின்னர் கில் அவுட்டாகி வெளியேறவே, ஸ்ரேயஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். கடைசிவரை களத்தில் நின்ற கோலி, 111 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இது ODIஇல் காேலியின் 51ஆவது சதம் ஆகும்.
News February 23, 2025
BIG BREAKING: இந்தியா அபார வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 241 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 242 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசினார்.