News February 23, 2025

மாணவனை அடித்த இந்தி ஆசிரியை சஸ்பெண்ட்

image

சென்னையில் இந்தி கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் பவன் பள்ளியில் படித்து வரும் 3 ஆம் வகுப்பு மாணவன் இந்தி கவிதையை சரியாக சொல்லாததால், அவரை இந்தி ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன் என மிரட்டியதால், பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனால், ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தினாலே இப்ப பிரச்னை தான்!

Similar News

News February 23, 2025

பாண்ட்யா வாட்ச்சின் விலை ரூ.7 கோடியா? ஆத்தாடி!

image

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் பாண்ட்யா பந்துவீசியபோது கையில் ஒருவகை வாட்ச் அணிந்திருந்தார். அந்த வாட்ச், மிகச் சிலரிடமே இருக்கும் விலை அதிக மதிப்புடைய Richard Mille RM 27-02 வாட்ச் என்று தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் ரூ.7 கோடி என்றும் அந்தத் தகவல் கூறுகிறது. உங்கள் வாட்ச்சின் விலை என்ன?

News February 23, 2025

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இன்டர்நெட்.. அரசு அறிவுறுத்தல்

image

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் புதிதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிஎஸ்என்எல் இணைய சேவை தரவுகளை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் அதை உடனடியாக செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவை பெறாத பள்ளிகளும் உடனடியாக அதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News February 23, 2025

ஹேப்பி நியூஸ்… அதிகரிக்கும் வரையாடுகள் எண்ணிக்கை

image

தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு(Nilgiri Tahr) தான். பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத் தொடர்ச்சி மலையில், தமிழக – கேரள வனப்பகுதிகளில் இவை வாழ்கின்றன. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணியிலும் குறிப்பிடப்பட்ட வரையாடுகளை பாதுகாக்க, கடந்த 2023ல் அரசு சிறப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!