News March 29, 2024

ஈரோட்டில் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம்

image

ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.இ பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இன்று ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்தியா கூட்டணி கட்சியின் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 12, 2026

ஈரோடு: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ஈரோடு மாவட்ட மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ் அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். (இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க)

News January 12, 2026

ஈரோடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு

image

ஈரோடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE)

News January 12, 2026

ஈரோட்டில் அடுத்தடுத்து கொள்ளை முயற்சி

image

ஈரோடு மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 2 ஏடிஎம் மையங்களில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரங்களை சேதப்படுத்த முயன்றபோது, பாதுகாப்பு அலாரம் பலத்த சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!