News February 23, 2025
அப்பாவான OpenAI CEO சாம்

OpenAI CEO சாம் ஆல்ட்மேனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே பிறந்துள்ளதால், NICUவில் வைத்து பராமரிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், இருப்பினும் குழந்தை ஆக்டிவ்வாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். சாம் தனது நீண்ட நாள் காதலியான ஆலிவரை, கடந்த 2024ல் திருமணம் செய்தார்.
Similar News
News February 23, 2025
மிகச் சிறந்த நடனக் கலைஞர் காலமானார்

நாட்டின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான மயாதார் ராவுத் (92) வயது மூப்பால் டெல்லியில் காலமானார். ஒடிசாவில் பிறந்த இவர், புறக்கணிக்கப்பட்ட ஒடிசி நடனத்தை மீட்டெடுத்து, அதற்கு புதிய வடிவம் கொடுத்து, இன்று கிளாசிகல் நடனங்களில் ஒன்றாக ஒடிசி திகழக் காரணமாக இருந்தார். இதனால் அவரை ‘ஒடிசி நடனத்தின் தந்தை’ என்கின்றனர். பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருதுகள் உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார்.
News February 23, 2025
மீனவர் பிரச்னை: பணிக்குழுக் கூட்டம் கூட்ட CM வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டம் கூட்ட வேண்டுமென மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 119 மீனவர்களும், 16 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலுவான தூதரக முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
News February 23, 2025
CT கிரிக்கெட்: ரோஹித் புதிய சாதனை

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சுப்மன் கில்லுடன் ரோஹித் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 20 ரன்கள் எடுத்திருந்தபோது சகீன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும், ஒருநாள் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை வேகமாக ரோஹித் கடந்தார். இதன்மூலம் 181 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்களை வேகமாக கடந்த முதல் துவக்க ஆட்டக்காரர் என்ற புதிய சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.