News February 23, 2025
கடலூரில் மஞ்சப்பை விருது பெற அழைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் மாற்றாக பொருட்களை பயன்படுத்த பங்களிப்பு செய்த பள்ளி கல்லூரி வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 18 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும். இதன் விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் தெரிவிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2025
கடலூர்: 10th பாஸ் போதும்.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநர் ( Driver Cum Delivery) பணியிடங்களுக்கான அறிவிப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட நபர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்!
News April 20, 2025
ரெட்டிச்சாவடி: பெண்ணை தாக்கிய இளைஞர் கைது

ரெட்டிச்சாவடி அடுத்த சின்ன இருசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் புதுக்குப்பத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து விட்டு நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அரியாங்குப்பத்தை சேர்ந்த கோகுல் (19) என்பவர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று அசிங்கமாக திட்டி தாக்கினார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து கோகுலை கைது செய்தனர்.
News April 20, 2025
கடன் பிரச்சினையை தீர்க்கும் கால பைரவர் கோயில்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பைரவர் கோயில்களில் முதன்மையானதாக சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி காலபைரவர் கோயில் கருதப்படுகிறது. காசியில் உள்ள காலபைரவர் சிலையை வடிவமைத்த சிற்பி தான் இக்கோயிலில் உள்ள சிலையை வடிவமைத்திருக்கிறார் என தல புராணம் கூறுகிறது. கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் அஷ்டமியில், இக்கோயிலில் மிளகு தீபம் ஏற்றி வழிபாட்டால் கடன் பிரச்சனை நீங்கும் அது நம்பிக்கை. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.