News February 23, 2025
மொழியை வைத்து பிரிவினை: சீமான்

மொழியை வைத்து மத்திய அரசு மக்களை பிரிக்கப் பார்ப்பதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தி மொழி திணிப்பே மும்மொழிக் கொள்கையின் நோக்கம் எனவும், எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். விளம்பர பலகைகளை கூட ஆங்கிலத்தில் வைத்து தாய் மொழியை அழித்துவிட்டதாகவும், அதையெல்லாம் மீட்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 23, 2025
இந்தியாவுல நடந்திருந்தா நிலைமையே வேற!

உலகளவில் அதிக மக்களால் பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியும் ஒன்று. 2011 உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடிய போட்டியை 50 கோடி மக்கள் பார்த்ததாக புள்ளி விவரங்கள் உண்டு. ஆனால், இன்றைய போட்டியில் மைதான இருக்கைகள் காலியாக உள்ளன. துபாயில் நடைபெறும் இப்போட்டி, இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ நடந்திருந்தால் நிலைமையே வேற.
News February 23, 2025
திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு டிக்கெட்டுகள் நாளை வெளியாக உள்ளது. திருமலை செல்வோர் 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யலாம். அந்தவகையில், மே மாதத்திற்கான டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கும், தங்கும் விடுதிக்கான டிக்கெட்டுகள் மாலை 3 மணிக்கும் வெளியாகிறது. டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in/ என்ற தளத்தில் பெறுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
News February 23, 2025
5ஆவது கணவரை விவாகரத்து செய்தார் ஜெனிபர் லோபஸ்

உலக புகழ்பெற்ற அனகோண்டா பட நாயகியும், பாப் பாடகியுமான ஜெனிபர் லோபஸ், பேட்மேன் பட நாயகன் பென் அப்லெக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். விவாகரத்து கோரி ஜெனிபர் தொடர்ந்த வழக்கில், லாஸ் ஏஞ்செல்ஸ் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து 2 பேரும் மற்ற செட்டில்மென்ட்களை வெளியே பேசி தீர்வு காணவுள்ளனர். பென் அப்லெக், ஜெனிபரின் 5ஆவது கணவர். அப்லெக்கிற்கு ஜெனிபர் 2ஆவது மனைவி ஆவார்.