News February 23, 2025
ஐ.எஸ்.எல் தொடர்: ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பஞ்சாப் அணியை ஈஸ்ட் பெங்கால் அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அந்த அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது. 13 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இன்றைய வெற்றியின் மூலம் ஈஸ்ட் பெங்கால் அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Similar News
News February 23, 2025
வலியால் அவதிப்படும் முகமது ஷமி

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் பும்ராவும் இல்லாததால், ஷமியின் தேவை அவசியமாகிறது. ஆகையால், கணுக்கால் வலியையும் பொருட்படுத்தாமல் அவர் விளையாடி வருகிறார். அதன் தாக்கமாக, முதல் ஒவரிலேயே அவர் 5 Wide Ball வீசினார். பின்னர், 5ஆவது ஓவரின் முடிவில் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்பின், மீண்டும் பந்துவீசத் தொடங்கினார்.
News February 23, 2025
விடுபட்டோருக்கு விரைவில் ரூ.1,000: அமைச்சர் KKSSR

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் சேராமல் உள்ள பெண்கள், அரசு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், விருதுநகர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், விடுபட்டோரில் தகுதியானோருக்கு விரைவில் ரூ.1,000 வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
News February 23, 2025
சுரங்கத்தில் தெரிந்த தொழிலாளியின் கை

தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதனிடையே, சுரங்கத்தில் 14 கி.மீ தூரத்தை அடைந்த நிலையில், சேற்றில் சிக்கியவாறு ஒரு தொழிலாளியின் கை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளே சிக்கிய 8 தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அனைவருமே சேற்றில் சிக்கியிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.