News February 23, 2025
CT 2025: பென் டக்கெட் புதிய சாதனை

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸி., அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 165 ரன்கள் குவித்த அவர், இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் நாதன் ஆஸ்டில் 145*, மூன்றாவது இடத்தில் ஆண்டி ஃப்ளவர் 145, நான்காவது இடத்தில் கங்குலி 141* உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.
Similar News
News February 23, 2025
மோசமான சாதனையை படைத்த இந்தியா!!

ODIல் இந்திய அணி, தொடர்ந்து 12 முறை டாஸில் தோற்று, தொடர்ச்சியாக அதிக முறை டாஸ் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. 2023 உலகக்கோப்பையில் தொடங்கி தற்போது வரை ஒருமுறைக்கூட இந்தியா டாஸை வெல்லவில்லை. இப்பட்டியலில் 2வது இடத்தில் நெதர்லாந்து அணி (11 போட்டிகளுடன்) உள்ளது. Stay tuned with Way2News for INDvsPAK match updates.
News February 23, 2025
சமையல் எண்ணெய் விலை உயர்வு!

உள்ளூர் விவசாயிகளை ஊக்கப்படுத்த, தாவர எண்ணெய் மீதான இறக்குமதி வரியை உயர்த்த, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பரில் இறக்குமதி வரி உயர்வு காரணமாக ₹110க்கு விற்ற ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், படிப்படியாக விலை உயர்ந்து தற்போது, ₹150 ஆக உள்ளது. அதேபோல, பாமாயில், ₹95லிருந்து ₹140 ஆன நிலையில், இது மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News February 23, 2025
மக்களுக்காக CM ஸ்டாலின் என்ன செய்தார்? ஜெயக்குமார்

திமுகவும் – பாஜகவும் ஒரு புரிதலுடன் செயல்படுவதால் மக்கள் பிரச்னையைப் பற்றி இருகட்சிகளும் பேசுவதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சமூக வலைதளங்களில் திமுகவும், பாஜகவும் பரஸ்பரம் டிரெண்டிங் செய்வது தொடர்பான கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்தார். மீனவர்கள் கைதுக்கு கடிதம் எழுதுவதை தவிர மக்களின் நன்மைக்காக CM ஸ்டாலின் என்ன செய்தார்? எனவும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.