News February 23, 2025

BREAKING: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

image

CT கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. லாகூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 351 ரன்களை குவித்தது. பின்னர் 352 ரன்கள் என்ற கடின இலக்குடன் விளையாடிய ஆஸி. ஆரம்பம் முதல் அதிரடி காட்டியது. 47.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து ஆஸி அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இங்க்லிஸ்* 120 ரன்கள் விளாசினார்.

Similar News

News February 23, 2025

INDக்கு எதிரான போட்டி.. PAKக்கு பெரிய ஷாக்?

image

CTல் இன்று IND vs PAK மோத உள்ள நிலையில், PAKன் ஸ்டார் வீரர் பாபர் அசாம் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்கிறார்கள். கண் எரிச்சல் காரணமாக நேற்றையை பயிற்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால், அணியில் அவர் இடம்பெறுவது சந்தேகம் தான் கூறப்படுகிறது. இது PAK அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. முன்னதாக, ஓபனிங் வீரர் ஃபகர் ஜமான் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியிருந்தார்.

News February 23, 2025

நெட் தேர்வு முடிவு வெளியீடு

image

யுஜிசி நெட் <>தேர்வு முடிவுகளை<<>> தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியர், JRF, PhD சேர்க்கைக்கான தகுதித் தேர்வான இத்தேர்வு வருடத்திற்கு இருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024 டிசம்பர் மாதத்திற்கான தேர்வு ஜனவரி 3ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 6,49,490 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வில் மொத்தம் 1,67,764 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

News February 23, 2025

2 நாள்களில் வசூலை அள்ளிய ‘டிராகன்’

image

பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் வெளியான ‘டிராகன்’ படம் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் வெளியான 2 நாள்களில் சுமார் 25 கோடி வரை உலகளவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படிப்பு எவ்வளவு முக்கியம் என்ற கதையை காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்து அசத்தலாக வெளிவந்துள்ள இப்படத்தில் கயடு, அனுபமா, கே.எஸ்.ரவிக்குமார், ஜார்ஜ் மரியம் ஆகியோர் நடித்துள்ளனர்.

error: Content is protected !!