News February 22, 2025
அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 215 பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனக் கூறப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்புவோர் www.assamrifles.gov.in. இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 22ஆம் தேதி கடைசி நாளாகும்.
Similar News
News February 23, 2025
INDக்கு எதிரான போட்டி.. PAKக்கு பெரிய ஷாக்?

CTல் இன்று IND vs PAK மோத உள்ள நிலையில், PAKன் ஸ்டார் வீரர் பாபர் அசாம் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்கிறார்கள். கண் எரிச்சல் காரணமாக நேற்றையை பயிற்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால், அணியில் அவர் இடம்பெறுவது சந்தேகம் தான் கூறப்படுகிறது. இது PAK அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. முன்னதாக, ஓபனிங் வீரர் ஃபகர் ஜமான் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியிருந்தார்.
News February 23, 2025
நெட் தேர்வு முடிவு வெளியீடு

யுஜிசி நெட் <
News February 23, 2025
2 நாள்களில் வசூலை அள்ளிய ‘டிராகன்’

பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் வெளியான ‘டிராகன்’ படம் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் வெளியான 2 நாள்களில் சுமார் 25 கோடி வரை உலகளவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படிப்பு எவ்வளவு முக்கியம் என்ற கதையை காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்து அசத்தலாக வெளிவந்துள்ள இப்படத்தில் கயடு, அனுபமா, கே.எஸ்.ரவிக்குமார், ஜார்ஜ் மரியம் ஆகியோர் நடித்துள்ளனர்.