News February 22, 2025
இங்கிலாந்திடம் பலிக்காத ஆஸி. பந்துவீச்சு

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு இன்று எடுபடவில்லை. முன்னணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பொளந்து கட்டினர். மேக்ஸ்வெல் 7 ஓவர்கள் வீசி 58 ரன்களையும், ஸ்பென்சர் ஜான்சன் 7 ஓவர்கள் வீசி 54 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். அதேபோல், ட்வார்சுஸ் 66 ரன்கள், ஆடம் ஜாம்பா 64 ரன்கள், நாதன் எல்லிஸ் 51 ரன்கள் என வாரி வழங்கினர்.
Similar News
News February 23, 2025
நாதகவில் மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகல்

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தலைமை சரியாக இல்லாததால் சரியான பாதையில் செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர், தனது ஆதரவாளர்கள் 300 பேருடன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். NTKவில் இருந்து அடுத்தடுத்து பலரும் விலகி வரும் நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என சீமான் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
News February 23, 2025
மாணவனை அடித்த இந்தி ஆசிரியை சஸ்பெண்ட்

சென்னையில் இந்தி கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் பவன் பள்ளியில் படித்து வரும் 3 ஆம் வகுப்பு மாணவன் இந்தி கவிதையை சரியாக சொல்லாததால், அவரை இந்தி ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன் என மிரட்டியதால், பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனால், ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தினாலே இப்ப பிரச்னை தான்!
News February 23, 2025
எந்த வழியில் வந்தாலும் ஏற்க மாட்டோம்: CM ஸ்டாலின்

மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என CM ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என கேட்டுக் கொண்டார். மும்மொழி கொள்கை விவகாரத்தில் ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.