News February 22, 2025
பாக்.கிற்கு எதிராக கோலி நாளை விளையாடுவாரா?

CT போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியில், கோலி, ராேஹித் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி உறுதி. ஆனால் கோலியின் இடதுகாலில் ஐஸ் பேக் கட்டப்பட்டது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு காலில் காயமா? நாளை அவர் விளையாடுவாரா? என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Similar News
News February 23, 2025
2 நாள்களில் வசூலை அள்ளிய ‘டிராகன்’

பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் வெளியான ‘டிராகன்’ படம் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் வெளியான 2 நாள்களில் சுமார் 25 கோடி வரை உலகளவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படிப்பு எவ்வளவு முக்கியம் என்ற கதையை காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்து அசத்தலாக வெளிவந்துள்ள இப்படத்தில் கயடு, அனுபமா, கே.எஸ்.ரவிக்குமார், ஜார்ஜ் மரியம் ஆகியோர் நடித்துள்ளனர்.
News February 23, 2025
மாத்திரை அட்டைகளில் சிவப்பு கோடு இருந்தால்…

மருந்து அட்டைகளில் இருக்கும் இந்த குறியீடு மிகவும் முக்கியமானது. சிவப்பு கோடு இருக்கும் மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளவே கூடாது என மத்திய அமைச்சகம் அறிவுறுத்துகிறது. இந்த சிவப்பு கோடு, Antibiotics மருந்துகளில் காணப்படும். ஆகவே, மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், உடல்நல பிரச்னைகள் வரக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
News February 23, 2025
நாதகவில் மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகல்

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தலைமை சரியாக இல்லாததால் சரியான பாதையில் செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர், தனது ஆதரவாளர்கள் 300 பேருடன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். NTKவில் இருந்து அடுத்தடுத்து பலரும் விலகி வரும் நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என சீமான் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.