News February 22, 2025
சட்டத்திற்குள் அடங்காத தமிழ்நாடு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தே தமிழ்நாடு சிறப்பு விதிவிலக்கு பெற்றிருக்கிறது. எதில் தெரியுமா? இந்தியாவிற்கான அலுவல் மொழிகள் விதிகள் 1963ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அதில் இரண்டாவது வரியிலேயே, “இந்த விதிகள், தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதிற்கும் பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு மட்டும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்று அன்றே சட்டம் இயற்றப்பட்டது.
Similar News
News February 23, 2025
திசை தெரியாமல் செல்லும் அதிமுக கப்பல்..

திசை தெரியாமல் செல்லும் அதிமுக கப்பலை தலைமை ஏற்க வருக! வருக! என சசிகலாவுக்கு ஆதரவாக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் டிரெண்டாகி வருகிறது. அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வழக்கு, முன்னாள் அமைச்சர்களின் அதிருப்தி என மீண்டும் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான நாளை(பிப்.24) சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News February 23, 2025
மெரினாவுக்கு போங்க: பீச்சு; மேட்சு ரெண்டும் பார்க்கலாம்!

இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சென்னை மக்கள் காண விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன் மாலையில் மெரினாவுக்கு சென்றுவிட்டால் போதும், லைவ்வாக மேட்ச்சை கண்டுகளிக்கலாம். இதற்காக மெரினாவில் விவேகானந்தர் இல்லம் எதிரிலும், பெசன்ட் நகரில் போலீஸ் பூத் அருகிலும் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மெரினா செல்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
News February 23, 2025
‘டிராகன்’ நாயகியின் கல்யாண கண்டிஷன்கள்

‘டிராகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள கயாடு லோஹர் (24), தன்னை திருமணம் செய்து கொள்வதற்கான கண்டிஷன்களை பகிர்ந்துள்ளார். அதில், தன்னை மட்டுமே அதிகமாக நேசிக்கக் கூடியவராக இருக்க வேண்டும் எனவும், அவருடைய அன்பு கொஞ்சம் கூட மற்றவருக்கு போகக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நேர்மையானவராக, தனக்காக கதவு திறந்துவிடுவது போன்ற சின்ன சின்ன சேவகங்களை செய்ய வேண்டும் எனவும் கண்டிஷன் போட்டுள்ளார்.