News March 29, 2024
ஆம்பூர் வந்த வில்லன் நடிகர்

ஆம்பூர் தனியார் தோல் தொழிற்சாலை முன்பு இன்று மாலை 6 மணியளவில் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் அவருடன் சென்று செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
Similar News
News January 15, 2026
திருப்பத்தூர்: அடிதடியில் கார்பெண்டர் பலி!

கோவிலூரை சேர்ந்த கார்பெண்டர் காணிக்கைராஜ் (51). இவர் கடந்த 4-ம் தேதி இரவு ராமநாதன் (70), அஜித் (25), முரளி (42) ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது ஏற்பட்ட தகராறில் முரளி, குமார் இருவரும் காணிக்கைராஜை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த இவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஜன.13) உயிரிழந்தார். இதை தொடர்ந்து போலீசார் குமார், முரளி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
News January 15, 2026
ஜோலார்பேட்டையில் போலீசார் மீது பைக் மோதல்

ஜோலார்பேட்டை போலிஷ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலிசார் (ஜன.13) ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் சேர்ந்த வசந்த் (வயது 28) என்பவர் சோதனையில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து நேற்று (ஜன.14) ஜோலார்பேட்டை போலிசார் சப் இன்ஸ்பெக்டர் மீது மோதிய வசந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
News January 15, 2026
திருப்பத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் புகார்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜன.14) நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சியை சேர்ந்த அஸ்லம் பாஷா புகார் மனு அளித்தார். உடன் ஆல்பர்ட், ரஞ்சித் குமார், ராஜேந்திரன் ஆகியோர் சென்று மனு அளித்தனர்.


