News February 22, 2025
இந்திய கடலோரக் காவல்படையில் பணி புரிய அறிய வாய்ப்பு!

இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 25, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (ஆக.25) இரவு 11 மணி முதல் நாளை காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 25, 2025
இராணிபேட்டை மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

இராணிப்பேட்டை மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
அரக்கோணத்தில் அதிமுகவினர் கைது

அரக்கோணத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியை கண்டித்து இன்று (ஆக.25) தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் 150க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.