News February 22, 2025
ஷுப்மன் கில்லுக்கு இவ்வளவு சொத்தா!

2025 நிலவரப்படி, ஷுப்மன் கில்லின் நிகர சொத்து மதிப்பு ₹32 கோடிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. BCCI ஒப்பந்தம் மூலம் அவர் ஆண்டுக்கு ₹5 கோடி சம்பளம் பெறுகிறார். IPLல் GT அணிக்காக ₹16.50 கோடிக்கு கையெழுத்திட்டுள்ளார். ஜில்லட், டாட்டா கேபிடல், மை11சர்க்கிள் நிறுவனங்களின் விளம்பர காண்ட்ராக்ட் வருமானமும் வருகிறது. பென்ஸ், ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட சொகுசு கார்களுடன், பஞ்சாப்பில் அதி நவீன வீட்டையும் வைத்துள்ளார்.
Similar News
News February 23, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன், வணக்கத்திற்கு உரியவன். ▶நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். ▶பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான், அவர்கள் தேவை பூர்த்தியான பிறகு கெட்டவர்கள் ஆகிவிடுகிறோம். ▶ நெஞ்சிலே வலு இருந்தால், வெற்றி தஞ்சமென உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி.
News February 23, 2025
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஏழைகளின் ஆப்பிள்

ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் பேரிக்காயில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால், அதனை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு பேரிக்காயில் 6 கிராம் நார்ச்சத்து இருப்பதாகவும், ஒரு பெண்ணுக்கு தேவைப்படும் சராசரி நார்ச்சத்து அளவில் 24% ஒரு பேரிக்காய் சாப்பிடுவதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. உடல் எடையை குறைப்புக்கு பேரிக்காய் பேருதவியாக இருக்கிறது.
News February 23, 2025
ஐ.எஸ்.எல் தொடர்: ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பஞ்சாப் அணியை ஈஸ்ட் பெங்கால் அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அந்த அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது. 13 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இன்றைய வெற்றியின் மூலம் ஈஸ்ட் பெங்கால் அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.