News February 22, 2025
சேலத்தில் பூண்டு விலை கடும் சரிவு

சேலம், செவ்வாய்பேட்டை மார்க்கெட், லீ பஜாருக்கு வட மாநிலங்களில் இருந்து தினசரி பூண்டு வரத்து சுமார் 70 டன்னில் இருந்து 100 டன்னாக உயர்ந்துள்ளது. இதனால் மலைப்பூண்டு கிலோ ரூ.250 ஆகவும், நாட்டு ரக பூண்டு ரகத்திற்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.150 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விலை கடுமையாக சரிவால் பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.
Similar News
News November 16, 2025
JUST IN: சேலத்தில் இப்படி ஒரு இடமா? மறக்காம விசிட் பண்ணுங்க!

சேலம்: கோரிமேடு குரும்பப்பட்டி அருகே உள்ள காப்புக்காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நகர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, குடும்பத்துடன் அமர்ந்து பேசும் வகையில் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் புற்களால் வேயப்பட்ட கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.ரூ.10 நுழைவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறக்காம விசிட் பண்ணுங்க!
News November 16, 2025
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான (கணினி சார்ந்த தேர்வு) தேர்வு இன்று (நவ.16) காலை, மாலை நடக்கிறது. இத்தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 2,416 பேர் 7 மையங்களில் எழுதவுள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
News November 16, 2025
சேலத்தில் வேலை அறிவித்தார் ஆட்சியர்!

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நவம்பர் 21 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, செவிலியர் பயிற்சி பெற்றவர்களுக்கு பல நிறுவனங்கள் வேலை வழங்க உள்ளன. www.tnprivatejobs.in.gov.in தளத்தில் முன்பதிவு அவசியம். இதனை மற்றவர்களுகும் ஷேர் பண்ணுங்க!


