News February 22, 2025
ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது: RN ரவி

ஒவ்வொரு முறையும் அமைச்சரவை ஆலோசனைபடி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என ஆளுநர் RN ரவி உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் உள்ளதாகவும், மசோதாவை நிறுத்தி வைத்தாலே அந்த மசோதா செயலிழந்துவிட்டதாக அர்த்தம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 23, 2025
மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய உ.பி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹென்றி 23 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய டெல்லி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
News February 23, 2025
டிஜிட்டல் தளங்களுக்கு புதிய சட்டம்?

யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆபாச வீடியோக்கள் மற்றும் அவதூறு செய்திகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது உள்ள சட்டங்கள் குறித்தும், புதிய சட்டங்களின் தேவை குறித்தும் ஆய்வு செய்து வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது.
News February 23, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன், வணக்கத்திற்கு உரியவன். ▶நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். ▶பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான், அவர்கள் தேவை பூர்த்தியான பிறகு கெட்டவர்கள் ஆகிவிடுகிறோம். ▶ நெஞ்சிலே வலு இருந்தால், வெற்றி தஞ்சமென உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி.