News February 22, 2025
ரூ.60 கோடி ஜீவனாம்சம் கொடுத்தாரா சாஹல்?

இந்திய கிரிக்கெட்டர் சாஹல் – தனஸ்ரீ தம்பதியர் விவாகரத்து பெற்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவர் தன் மனைவி தனஸ்ரீக்கு ஜீவனாம்சமாக ரூ.60 கோடி வழங்கியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள தனஸ்ரீயின் பெற்றோர், தாங்கள் பணம் கேட்கவும் இல்லை, அப்படி எந்த ஆபரும் தங்களுக்கு வரவும் இல்லை என்று கூறியுள்ளதுடன், தங்கள் தனிப்பட்ட விஷயங்களில் இப்படி வதந்திகளை பரப்ப வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டனர்.
Similar News
News February 23, 2025
BREAKING: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

CT கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. லாகூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 351 ரன்களை குவித்தது. பின்னர் 352 ரன்கள் என்ற கடின இலக்குடன் விளையாடிய ஆஸி. ஆரம்பம் முதல் அதிரடி காட்டியது. 47.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து ஆஸி அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இங்க்லிஸ்* 120 ரன்கள் விளாசினார்.
News February 22, 2025
IND-PAK நாளை மோதல்.. எந்த சேனலில் காணலாம்?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் நாளை துபாய் மைதானத்தில் மோதவுள்ளன. இப்போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ், நாளை மதியம் 2 மணிக்கு போடப்படும். பின்னர் அரை மணி நேரத்திற்கு பிறகு போட்டி தொடங்கும். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரலையாகக் காணலாம். ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் நேரலையாக போட்டியைக் காண முடியும்.
News February 22, 2025
அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 215 பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனக் கூறப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்புவோர் www.assamrifles.gov.in. இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 22ஆம் தேதி கடைசி நாளாகும்.