News February 22, 2025
ராசி பலன்கள் (22.02.2025)

மேஷம் – ஜெயம், ரிஷபம் – மகிழ்ச்சி, மிதுனம் – சுகம், கடகம் – உயர்வு, சிம்மம் – நட்பு, கன்னி – அமைதி, துலாம் – புகழ், விருச்சிகம் – ஆதரவு, தனுசு – பெருமை, மகரம் – சுபம், கும்பம் – செலவு, மீனம் – கீர்த்தி.
Similar News
News February 22, 2025
பாக்.கிற்கு எதிராக கோலி நாளை விளையாடுவாரா?

CT போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டியில், கோலி, ராேஹித் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி உறுதி. ஆனால் கோலியின் இடதுகாலில் ஐஸ் பேக் கட்டப்பட்டது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு காலில் காயமா? நாளை அவர் விளையாடுவாரா? என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
News February 22, 2025
சட்டத்திற்குள் அடங்காத தமிழ்நாடு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தே தமிழ்நாடு சிறப்பு விதிவிலக்கு பெற்றிருக்கிறது. எதில் தெரியுமா? இந்தியாவிற்கான அலுவல் மொழிகள் விதிகள் 1963ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அதில் இரண்டாவது வரியிலேயே, “இந்த விதிகள், தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதிற்கும் பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு மட்டும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்று அன்றே சட்டம் இயற்றப்பட்டது.
News February 22, 2025
“ரூ.10 ஆயிரம் கோடி தந்தாலும் அப்பாவத்தை செய்யமாட்டேன்”

எந்த மொழிக்கும் நாம் எதிரியல்ல. அதேநேரம் தேசிய புதிய கல்விக் கொள்கை என்பது சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை என விமர்சித்துள்ளார் CM ஸ்டாலின். கடலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ரூ.2,000 கோடி பணத்திற்காக இன்றைக்கு நாங்கள் கையெழுத்து போட்டால், 2,000 ஆண்டுக்கு பின்னோக்கி தமிழ் சமுதாயம் போய்விடும். ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், அந்த பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்றார்.