News February 21, 2025
வீடு மனை தோஷங்களை நீக்கும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி!

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் மன்னச்சநல்லூரில் அமைந்துள்ளது பூமிநாத சுவாமி கோயில். இங்கு சிவபெருமான் வாஸ்து கடவுளாக அருள்பாலிக்கிறார். சொந்த வீடு வாங்க,புதிய வீடு கட்டுமானம் தொடங்கியதும் வாஸ்து குறைகளால் ஏற்படும் தடங்கள்,நிலம் மனை விற்பதில் தடை,சொத்து வழக்கு பிரச்சனை உள்ளிட்ட 16 விதமான மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு சக்தி வாய்ந்த ஸ்தலமாக இது விளங்குகிறது.
Similar News
News August 9, 2025
திருவாரூர்: இழந்ததை மீட்டுத் தரும் எண்கண் முருகன்!

திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகனின் சிலையை வடித்த சிற்பியின் இரு கண்களை, முத்தரச சோழன் தானமாக பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு முருகன் கண்களை வழங்கியதால் எண்கண் முருகன் என பெயர் வந்துள்ளது. இதனால் இங்கு பிராத்தித்தால் இழந்தவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதை Share பண்ணுங்க…
News August 9, 2025
அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து

குடவாசலில் இருந்து வலங்கைமான் வழியாக பாபநாசம் செல்லும் அரசு பேருந்து அகர ஓகை அருகே சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் மின்கம்பம் மூன்று துண்டுகளாக உடைந்து பேருந்தின் மீது விழுந்ததில், பேருந்தின் முன் பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த பெரும் விபத்தில் ஓட்டுனர் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
News August 9, 2025
சிறப்பு வழித்தடங்களுக்கு பேருந்து இயக்கம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து பல்வேறு பகுதிகள் வழியாக புதிய பேருந்து இயக்கம் செயல்முறைப்படுத்தப்பட்டு உள்ளன. திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பேருந்து, கோட்டூர், மன்னார்குடி, வடுவூர் உள்ளிட்ட பல ஊர்களின் வழியாக இயக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.