News February 21, 2025

வெடிபொருட்கள் கண்டுபிடிப்பிற்காக புதிய நாய்குட்டி

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் மோப்பநாய்ப்படைப் பிரிவிற்கு “வெடிபொருள் (EXPLOSIVE) கண்டுபிடிப்பிற்காக இன்று “(பிப்-21) புதிதாக மோப்பநாய்க்குட்டி காவல்துறையின் சார்பில் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா நாய்க்குட்டிக்கு “ஜெனி” என்று பெயர் சூட்டினார். இந்நிகழ்வின் போது ADSP T.மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவு DSP காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News

News September 22, 2025

பெரம்பலூர்: தாசில்தார் லஞ்சம் கேட்டால் இத செய்ங்க!

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது தாசில்தார் அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க

News September 22, 2025

பெரம்பலூர்: “தீபாவளிக்கு கூடுதல் பேருந்து இயக்க முடிவு”

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சா.சி.சிவசங்கரிடம் கேட்டபோது, “தீபாவளி பண்டிகைக்கு கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவில் பேருந்து வசதி இருக்கும். இதைப்பற்றி போக்குவரத்து துறை மேலாண்மை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.

News September 22, 2025

பெரம்பலூர்: வங்கி வேலை-ரூ.80,000 சம்பளம்

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <>https://www.ibps.in என்ற இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

error: Content is protected !!