News February 21, 2025

ஈரோடு: திண்டல் முருகன் கோவில்!

image

ஈரோடு, திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில். இக்கோவிலில் உள்ள இடும்பனார், பஞ்சம் ஏற்பட்டபோது மழை பொழிய வேண்டியதாகவும், வேண்டுதலை கேட்டு மழை பொழிந்ததாகவும் வரலாறு கூறுகிறது. மேலும், 2 எலுமிச்சை பழங்களை வைத்து பூஜிக்கும் பக்தர்கள், அதில் ஒன்றை வீட்டுக்கு எடுத்து சென்று, நறுக்கி வீட்டின் 4 பக்கங்களிலும் வீசினால், துஷ்டர்களாளும் எதிரிகளாலும் ஏற்படும் ஆபத்துகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

Similar News

News August 17, 2025

ஈரோடு மக்களே EB பில் அதிகமா வருதா?

image

ஈரோடு மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News August 17, 2025

மீன்வள உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு!

image

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் 4 மீன்வள உதவியாளர் பணி காலியாக உள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன், விண்ணப்பத்தை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகம், டேம் ரோடு-1, பவானிசாகர் 638451, போன்: 04295-299261 என்ற முகவரிக்கு ஆக.28ம் தேதி மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும் வகையில் தபால் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

News August 17, 2025

ஈரோடு: தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!

image

ஈரோடு மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்களில் 3 முதல் 6 மாத தையல் பயிற்சி முடித்தவர்கள், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் சேவை இல்லங்களில் தையல் பயிற்சி, அரசின் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி முடித்தவர்கள் சமூக நலத்துறை சார்பில், தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில், ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0424-2261405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!