News February 21, 2025

சென்னையில் ரூ.70,290 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 28 வயதிற்குள் இருக்கும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.70,290 வரை சம்பளம். ஆர்வமுள்ளவர்கள் https://clri.org/careers.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச்.01. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 30, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 29, 2025

செங்கல்பட்டில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவித்துள்ளார். அன்றைய தினம் திறந்திருக்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News September 29, 2025

மாவட்ட போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், படாளம்-புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி நடப்பதால், அவ்வழியைத் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் மாற்று வழியில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!