News February 21, 2025
மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை மார்ச்.20ஆம் தேதி ஒத்திவைப்பு

கனியாமூர் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை விசாரிக்க மாணவி ஸ்ரீமதியின் தாய் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், அடுத்த மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்திரவிட்டார்.
Similar News
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (13.9.2025 ) 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்.
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர்-2
மேலும் விவரங்கள் அறிய & விண்ணப்பிக்க <
News September 13, 2025
கள்ளக்குறிச்சி: கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு…

கள்ளக்குறிச்சி மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!