News March 29, 2024

திருவாரூர்: வர்த்தகர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

image

பேரளம் நகரத்தில் மழைநீரை வெளியேற்ற அமைக்கப்படும் வடிகால் நீண்ட நாட்களாக ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக பேரளம் கடைத்தெரு சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாமல் உள்ளதால் நாள் முழுவதும் மண், தூசிகள் பறந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகவே இதனை விரைந்து முடிக்க கடையடைப்பு போராட்டம் வரும் 04-04-2024  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

திருவாரூர் மாவட்டம் ஓர் பார்வை!

image

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் திருவாரூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.

▶️ மொத்த மக்கள் தொகை – 12.64 லட்சம்
▶️ ஆண்கள் – 6.26 லட்சம்
▶️ பெண்கள்- 6.37 லட்சம்
▶️ படிப்பறிவு – 82.86 %
▶️ மொத்த பரப்பளவு – 2,274 சதுர கி.மீ. SHARE NOW!

News December 26, 2025

திருவாரூர்: டிச.31 கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்!

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தங்கள் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும், ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்யாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள எதாவது ஒரு ரேஷன் கடையில் டிச.31-ம் தேதி கைரேகை பதிவு செய்யுமாறு ரேஷன் கடை விற்பனையாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

News December 26, 2025

திருவாரூர்: கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை

image

நீடாமங்கலம் அருகே குடிதாங்கிச்சேரியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்ரா (40). சுதாகர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் சித்ரா மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில், சித்ரா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!