News February 21, 2025

சேலத்தில் தங்கம் விற்பனை சரிவு!

image

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய அறிவிப்புகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விலை உயர்வால் சேலத்தில் உள்ள நகைக்கடைகளில் 20% வரை விற்பனை சரிந்துள்ளது. நிகழ்ச்சி, சுப முகூர்த்த நாட்கள் உள்ளதால் பெரிய அளவில் விற்பனை குறையவில்லை. தவிர பழைய தங்கத்தை புது தங்கமாக மாற்றத் தொடங்கியுள்ளனர். தங்க நாணயம் வாங்குவதும் உயர்ந்துள்ளதாக சேலம் மாநகர தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் தகவல்!

Similar News

News September 12, 2025

சேலம் விவசாயிகள் கவனத்திற்கு!

image

இ-வாடகை கைபேசி செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளம் https://mts.aed.tn.gov.in/evaadagai விண்ணப்பிக்கலாம்

News September 12, 2025

சேலம் அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை மேலும் நீட்டிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் கோரிமேடு இருபாலர் ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை மகளிர் ஐடிஐ என 4 அரசு ஐடிஐக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐக்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் செப்.30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடிஐயில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

News September 12, 2025

சேலம்: ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️சேலம் மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!