News February 21, 2025
பரபரப்புக்காக பேசுகிறார் அண்ணாமலை: திருமா சாடல்

அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசி வருவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக இருப்பதாகக் கூறிய அவர், நாகரிக அணுகுமுறை என்பதை முற்றாக தவிர்த்துவிட்டு யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்கிற நிலைப்பாட்டை எடுத்து அவர் அரசியல் செய்வதாக சாடினார். மேலும், அவரது அணுகுமுறை தனக்கு வியப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Similar News
News February 22, 2025
புதிதாக 60 கட்சிகள் உதயம்

2024 – 2025இல் நாடு முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், தமிழகத்திலிருந்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நமது உரிமை காக்கும் கட்சி, மக்கள் முரசு கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் தற்போது 6 தேசிய கட்சிகள், 58 மாநிலக் கட்சிகள் மற்றும் 2,763 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளது கவனிக்கத்தக்கது. புதிய கட்சிகள் உதயம் குறித்து உங்கள் கருத்து என்ன?
News February 22, 2025
செவ்வாய் கிரகத்தில் வீடு: சென்னை ஐஐடி சாதனை

செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமா? என்ற ஆய்வுகளில் அமெரிக்காவும், இந்தியாவும் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் அமைந்தால் அங்கு கட்டுமானங்களை எழுப்ப பிரத்யேக கான்கிரீட்களை உருவாக்கி சாதித்திருக்கிறது சென்னை ஐஐடி. நீரின்றி தயாரிக்கப்பட்டதுதான் இதன் தனித்துவமே. இதை வைத்து செவ்வாயில் வீடு கட்டினால் எப்படி இருக்கும்? அதை AI தொழில்நுட்பம் நம் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறது.
News February 22, 2025
டான்செட் தேர்வு: பிப்.26 வரை அவகாசம் நீட்டிப்பு

M.E., M.TECH., M.PLAN, M.ARCH., படிப்புகளில் சேருவதற்கான CEETA-PG மற்றும் MBA, MCA படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. <