News February 20, 2025
பெண்கள் குளிக்கும் போட்டோஸ்… பக்தர்கள் அதிர்ச்சி

மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் பயபக்தியுடன் திரண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பரவசம் அடைகின்றனர். அப்படி நீராடும் பெண்களை சில சமூக விரோதிகள் ரகசியமாக போட்டோ எடுத்து, அதை ஆபாசமாக சித்திரித்து விற்கிறார்கள். சில டெலிகிராம் சேனல்களில் ரூ.1,999-ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்துள்ள போலீஸார், தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பெண்களை சாமி கும்பிடக் கூட விடமாட்டீங்களா?
Similar News
News July 4, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹440 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹440 குறைந்தது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹9,050-க்கும், சவரன் ₹72,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாள்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், சர்வதேச <<16934070>>சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்<<>> காரணமாக இந்தியாவிலும் தங்கம் விலை சற்று சரிந்துள்ளது.
News July 4, 2025
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

ஜூலை 7-ம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனி மாத சுபமுகூர்த்த நாளையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.
News July 4, 2025
அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. திருவள்ளூர், கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும்,சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.