News March 29, 2024
என்னோட டார்கெட் RCB மட்டும் தான்

பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய ஒவ்வொரு முறையும், அவர்களை வீழ்த்தியே ஆக வேண்டும் என நினைத்ததாக கொல்கத்தா அணியின் ஆலோசகர் கம்பீர் தெரிவித்துள்ளார். RCB அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்றாலும், தனது மனதில் அவர்கள் கோப்பையை வென்றவர்கள்தான் என்ற எண்ணம் எப்போதும் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், கோலி, கெயில், ABD போன்றோரைக் கொண்ட வலிமையான அணியாக RCB இருந்ததாகக் கூறினார்.
Similar News
News October 29, 2025
மாரி செல்வராஜை ஊக்கப்படுத்திய மணிரத்னம்

மாரி செல்வராஜ் தான் உண்மையான பைசன் என மணிரத்னம் பாராட்டியுள்ளார். உங்கள் படத்தை பார்த்து பெருமைப்படுவதாகவும், இந்த குரல் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு, என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் நன்றி என மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார். ‘பைசன்’ படத்தை பார்த்து CM தொடங்கி பல பிரபலங்கள், மாரிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News October 29, 2025
திமுக கூட்டணியில் இணைகிறாரா ராமதாஸ்?

அண்மை கால அரசியல் நிகழ்வுகள் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைவதற்கான சிக்னல்களாக பார்க்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் விசிக, பாமக ஒரு அணியில் இருக்க முடியாது என பேசி வந்த திருமா, அண்மையில் திமுக கூட்டணியில் ராமதாஸ் வருகிறாரா என்ற கேள்விக்கு சைலண்டாக சென்றார். நேற்று இரவு, திமுக கூட்டணியில் உள்ள கொமதேக தலைவர் ஈஸ்வரன் திடீரென ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
News October 29, 2025
குல்தீப் or அர்ஷ்தீப் சிங்.. இன்று விளையாட போவது யார்?

ஆஸி., அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணியில் பவுலர்களாக யார் யார் இடம்பெறுவார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது. பும்ரா, வருண் ஆகியோருடன் ODI-யில் சிறப்பாக செயல்பட்ட ராணாவும் இருப்பார் என்றே நம்பப்படுகிறது. ஆல்ரவுண்டர்களாக துபே & அக்சர் இடம்பெறும் நிலையில், அணியில் ஒரு இடம் மட்டுமே பாக்கி இருக்கும். அதற்கு, குல்தீப் & அர்ஷ்தீப் இடையே போட்டி நிலவும். இருவரில் யார் அணியில் இடம்பெறலாம்?


