News February 20, 2025

லாரி மீது தனியார் கம்பெனி பேருந்து மோதல்: 6 பேர் காயம்

image

பூந்தமல்லி அடுத்த புதுச்சத்திரம் ஆஞ்சநேயர் கோயில் அருகே நேற்று (பிப்.19) காலை லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், தனியார் பேருந்து ஓட்டுநர் உள்பட 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

Similar News

News September 4, 2025

திருவள்ளூர்: 10th பாஸ் போதும்; 108 ஆம்புலன்சில் வேலை

image

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. ஓட்டுநர் SSLC தேர்ச்சி பெற்று , பேட்ச் வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். (சம்பளம் ரூ.21,120) மருத்துவ பணியாளர் நர்சிங் முடித்திருக்க வேண்டும்.(சம்பளம் ரூ.21,320). இதற்கான நேர்முக தேர்வு வரும் செப்.7 ம் தேதி ஈக்காட்டுதாங்களில் உள்ள BDO அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க

News September 4, 2025

திருவள்ளூர்: 1,794 பேருக்கு வேலை.. ரூ.59,000 வரை சம்பளம்

image

▶️தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ▶️இதற்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️இப்பணிக்கு சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணப்பிக்க 02.10.25 கடைசி ஆகும். ▶️இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க. (EB வேலை வேண்டுவோருக்கு SHARE பண்ணுங்க)

News September 4, 2025

திருவள்ளூர் அருகே குழந்தை உயிரிழப்பு

image

திருவள்ளூர், கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 7 வயதில் சுபாஷினி, 1 வயதில் ஜெய்கிருஷ் என்ற குழந்தைகள். இந்நிலையில் நேற்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஜெய்கிருஷ், அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

error: Content is protected !!