News March 29, 2024

தூத்துக்குடி அருகே 6 பேர் கைது

image

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, அஜித்குமார், கார்த்திக் உட்பட 6 இளைஞர்கள் நேற்று அண்ணா நகர் பகுதியில் சாலையில் சென்ற ஒருவரிடம் அருவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

Similar News

News November 6, 2025

தூத்துக்குடி விமான நிலைய அதிகாரி பொறுப்பேற்பு

image

தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த ராஜேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மைசூர் விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த அனுப் என்பவர் தூத்துக்குடி விமான நிலை இயக்குனராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் நேற்று விமான நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

News November 6, 2025

தூத்துக்குடி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News November 6, 2025

தூத்துக்குடியில் ரூ.1.5 கோடி வரை மானியம் பெறலாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் விளைப் பொருள்களுக்கு மதிப்பு கூட்டும் மையம் அமைக்க ரூ.1.5 கோடி வரை மானியம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதப்படுத்தும் தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!