News March 29, 2024
வாழ்க்கையின் முரண்பாடு இதுதானோ?

கனடாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணியில் உன்முக்த் சந்த் இடம்பெறவில்லை. அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த U19 இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவர் தனது X பக்கத்தில், ‘நியாயமற்ற அமைப்புகளை பற்றியும், ஆரோக்கியமான மாற்றங்களின் அவசியம் குறித்தும் மக்கள் பேசுவதை கேட்கிறேன். ஆனால் அதே மக்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதே அநீதியான வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
களத்திற்கு வந்த விஜய்.. சற்று நேரத்தில் தொடங்குகிறது

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் அரசியல் களத்திற்கு வந்துள்ளதால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர். திமுக அரசை விளாசி <<18128546>>சூடான அறிக்கை<<>>, கட்சியில் நிர்வாகக் குழு அமைப்பு என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளிட்டதோடு, இன்று காலை 10 மணிக்கு 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுக் கூட்டம் பனையூர் அலுவலகத்தில் கூடுகிறது. இதில், அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் பெயர் இடம் பெறாதது ஒருபுறம் சர்ச்சையாகியுள்ளது.
News October 29, 2025
காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 30 பேர் பலி

இஸ்ரேல் PM <<18135061>>நெதன்யாகுவின்<<>> உத்தரவை தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானங்கள் காஸாவின் வடபகுதியில் உள்ள மிகப்பெரிய ஷிஃபா ஹாஸ்பிடலுக்கு அருகில் தாக்குதல் நடத்தின. தெற்கு காஸாவில் நடந்த மற்றொரு தாக்குதலில் சுமார் 5 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் 30 பேர் வரை பலியாகி உள்ளதாக காஸாவின் நிவாரண அமைப்புகள் தெரிவித்துள்ளன.
News October 29, 2025
மழைக்காலத்தில் பருக வேண்டிய முக்கிய கசாயம்!

✦தேவை: மிளகு, சீரகம், திப்பிலி, ஓமவல்லி இலை, சுக்கு, பனங்கற்கண்டு, வர கொத்தமல்லி ✦செய்முறை: மேல் குறிப்பிட்ட அனைத்தையும் நன்கு இடித்து, தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். இதனால், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை குணமாவதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். SHARE IT.


