News March 29, 2024

ஈரோடு தொகுதியில் 45 மனுக்கள் ஏற்பு

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 52 வேட்பு மனுக்களில் கூடுதல் மனுக்கள், வயது குறைவு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது என 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 45 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாளை இறுதி நாளாகும் .

Similar News

News January 17, 2026

ஈரோடு மக்களே உடனே செக் செய்யவும்!

image

ஈரோடு மக்களே, இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் SIR பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், உடனே உங்களின் பெயர், வரிசை எண், தொகுதி என அனைத்தும் SMS-ல் வரும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 17, 2026

ஈரோட்டில் தடை: கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

கர்நாடகாவில் குதிரைகளைத் தாக்கும் ‘கிளண்டர்ஸ்’ நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மாவட்டத்தில் பாதிப்பு இல்லை என்றாலும், நோய் பரவலைத் தடுக்க கர்நாடகாவிலிருந்து குதிரைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News January 17, 2026

விஜயமங்கலம் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருப்பூர் பத்மாவதி நகரைச் சேர்ந்த இளங்கோ (55), கடந்த 11-ம் தேதி பைக் மூலம் பெருந்துறைக்குச் சென்றபோது விஜயமங்கலம் அருகே பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், பெருந்துறை GHல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!