News February 19, 2025
தூக்கத்தை கெடுத்த சேவல்.. கோர்ட்டை நாடிய நபர்

விடியலை மனிதர்களுக்கு உணர்த்தும் அலாரமாக சேவல்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்த அலாரம் தனது தூக்கத்தை கெடுத்ததாக கேரளாவில் ஒருவர் கோர்ட்டை நாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் உள்ள சேவல், தினமும் அதிகாலை 3 மணிக்கே கூவி தன்னை மிகவும் டிஸ்டர்ப் செய்வதாக ராதாகிருஷ்ணன் என்பவர், கோர்ட்டை நாடினார். இதையடுத்து சேவல் கூண்டை வேறு இடத்திற்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 26, 2025
‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ ஏமாற்று வேலை: EPS

4 ஆண்டுகளாக எதையும் செய்யாமல், ஆட்சி முடிய ஓராண்டு மட்டுமே உள்ளபோது கவர்ச்சிகரமான திட்டங்களை ஸ்டாலின் அறிவிப்பதாக EPS சாடியுள்ளார். மேலும் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ என்பது ஏமாற்று வேலை என்றும் விமர்சித்துள்ளார். புதிய திட்டங்களை கொண்டுவராத திமுக, அதிமுகவின் திட்டங்களை முடக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
News August 26, 2025
CM ஸ்டாலின் இல்லை.. சேகர்பாபு, PTR பங்கேற்பு

ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சி இருப்பதால் கேரளாவின் ‘லோக அய்யப்ப சங்கமம்’ விழாவில் பங்கேற்கவில்லை என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள CM பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், CM ஸ்டாலினுக்கு பதிலாக செப்.20 அன்று அமைச்சர்கள் சேகர்பாபு, PTR அந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, TN-ல் கோயிலுக்கு செல்லாத ஸ்டாலின், கேரள அரசின் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை கூறியிருந்தார்.
News August 26, 2025
வரலாற்றில் இன்று

*1910 – நோபல் பரிசு வென்ற அன்னை தெரசா பிறந்த தினம்
*1954 – நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரண் பிறந்த தினம்
*1966 – தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது
*1972 – 22-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் தொடங்கியது
*1978 – விண்ணுக்கு பயணித்தார் முதல் ஜெர்மனி விண்வெளி வீரர் சிக்மண்ட் ஜான்.