News March 29, 2024
அடுத்தடுத்து மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் ராசிபுரம் அருகே எம்பி சின்ராஜூக்கு சொந்தமான ஆலையில் தேநீர் அருந்திய 15 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லி விழுந்த தேநீரை குடித்ததில் 15 பேர் அடுத்தடுத்து வாந்தி மயக்கமடைந்துள்ளனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் எம்பியின் ஆலையில் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
மதுப் பிரியர்களுக்கு அடுத்தடுத்து ஷாக்

திருவள்ளுவர் தினமான ஜன.16-ல் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக்குகளையும் மூட தமிழக அரசும் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், ஜன.16, 26 (குடியரசு தினம்), பிப்.1 (வடலூர் வள்ளலார் நினைவு தினம்) ஆகிய 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் ஷாக்கில் உள்ளனர்.
News January 14, 2026
10-வது போதும்.. ₹19,900 சம்பளம்!

NCERT-ல் Lower Division Clerk, Computer Operator Grade-III உள்பட 176 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன ✱வயது: 18- 50 வரை ✱கல்வித்தகுதி: 10-வது முதல் டிகிரி வரை வேலைக்கு ஏற்ப மாறுபடுகிறது ✱தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & நேர்காணல் ✱சம்பளம்: ₹19,900 – ₹78,800 ✱விண்ணப்பிக்க <
News January 14, 2026
இளவரசி TO ராணி: 20 வயதில் சாதனை!

ஸ்பெயினில் 150 ஆண்டுகளில் முதல்முறையாக 20 வயது இளவரசி லியானோர், ராணியாக பொறுப்பேற்று வரலாறு படைக்கவுள்ளார். 1868-ல் ஆட்சி செய்த 2-ம் இசெபல்லாவிற்கு பிறகு, அரியணையேறும் முதல் பெண் இவரே. அந்நாட்டு சட்டப்படி ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றிலும் தீவிர பயிற்சி பெற்ற இவர், தனியாக விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். பல மொழிகளை சரளமாக பேசும் இவர், ஸ்பெயினின் வலிமையான ராணியாக தயாராகிவிட்டார்!


