News March 29, 2024

தென்காசியில் ஜனநாயகத்திற்கு ஆபத்து

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது, கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சம் நிலவுகிறது. பாரதிய ஜனதா மற்றும் தேர்தல் ஆணையம் குறுகிய நோக்கத்தோடு நடந்தால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வரும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எந்த விதத்திலும் சரியானது இல்லை என்றார்.

Similar News

News December 26, 2025

தென்காசி: அரசு பேருந்தில் பிரேக் கோளாறால் விபத்து…

image

அம்பையில் இருந்து கடையம் அருகே உள்ள பெத்தாபிள்ளை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கடனாநதி அருகே சென்ற போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநர் அன்பரசனின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் பார்வதி (67), சூரியகவி (65), அமராவதி (67), ஜானகி (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.

News December 26, 2025

தென்காசி: அச்சத்தில் விவசாயிகள்!

image

ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபிள்ளையூர் மலையடிவார கிராமத்தில் மீண்டும் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து நேற்று அட்டகாசம் செய்ய தொடங்கியுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 6க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அப்பகுதியை சேர்ந்த பீட்டர், அருள்தாஸ், வின்சென்ட் தோட்டங்களில் நுழைந்து 80க்கும் மேற்பட்ட தென்னை, மா, பனை உள்ளிட்ட மரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளன.

News December 26, 2025

தென்காசி: டிகிரி போதும்., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

image

தென்காசி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க..

error: Content is protected !!