News March 29, 2024

எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை

image

மத்திய, மாநில அரசுகள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்ட அவர், ‘பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜி.எஸ்.டி கொண்டு வந்த பின் கோவையில் மில்கள் மூடப்பட்டுள்ளன. 300% மின் கட்டண உயர்வால், தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன’ என்றார்.

Similar News

News March 25, 2026

அதிருப்தியில் இருக்கிறாரா பூவை ஜெகன்மூர்த்தி?

image

NDA கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு KV குப்பம் தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், நாங்கள் எதிர்பார்த்தது வேறு, இன்று நடந்தது வேறு என்று அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, நாளை கட்சியின் நிர்வாகக் குழுவை கூட்டி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>

News March 25, 2026

4 நாள்கள் விடுமுறை: வேட்புமனு பற்றி முக்கிய அறிவிப்பு

image

TN தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்படும் என ECI அறிவித்துள்ளது. மார்ச் 30 – ஏப்.6 வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதில், மார்ச் 31 (செவ்வாய்), ஏப்.1 (புதன்), ஏப்.3 (வெள்ளி), ஏப்.5 (ஞாயிறு) விடுமுறை என்றும், மற்ற 4 நாள்களில் (மார்ச் 30, ஏப். 2, 4, 6) வேட்புமனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக <<19396196>>3 நாள் மட்டுமே<<>> விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

News March 25, 2026

14 அமைச்சர்களின் தொகுதி.. கூட்டணிக்கு ஒதுக்கிய அதிமுக

image

எ.வ.வேலு(தி.மலை), பெரியகருப்பன் (திருப்பத்தூர்), மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), நாசர் (ஆவடி), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), மதிவேந்தன்(ராசிபுரம்) <<19473111>>பாஜகவுக்கு<<>> ஒதுக்கீடு. KN நேரு (திருச்சி W), TRB ராஜா (மன்னார்குடி), மா.சு.,(சைதை) – <<19473208>>அமமுக<<>> போட்டி. சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), முத்துசாமி(ஈரோடு W), காந்தி (ராணிப்பேட்டை) தமாகாவுக்கு ஒதுக்கீடு. SS சிவசங்கர் (குன்னம்) – IJK போட்டி. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!