News February 19, 2025
நீங்க தயிர் சாதம்… நாங்க நல்லி எலும்பு!!

தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே கோபம் வரும்போது, நல்லி எலும்பு சாப்பிடும் தங்களுக்கு கோபம் வராதா என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தமிழ் மண்ணுக்கு தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும், TN அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை, CG குப்பையில் வீசுவதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News February 22, 2025
விண்கல்லை தகர்க்க நாசா திட்டம்

பூமியை நோக்கி அதிவேகத்தில் வந்து கொண்டிருக்கும் ’2024 YR4′ விண்கல்லை வானிலேயே தகர்க்க நாசா திட்டமிட்டுள்ளது. 2032ஆம் ஆண்டு இந்த விண்கல் பூமியில் மோதுவதற்கு 1.5% வாய்ப்பு உண்டு. அப்படி மோதினால், ஒரு நகரமே அழியும் என்றும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த விண்கல் பூமியில் மோதும் வாய்ப்பு அதிகரித்தால் நாசா அதனை வானிலேயே வெடிக்கச் செய்யும்.
News February 22, 2025
மிகவும் அரிது: ஒரு நபரின் உடலில் 5 சிறுநீரகங்கள்

குழப்பமாக இருக்கிறதா! பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் தேவந்தர் பார்ல்வார் (47) உடலில் 5 சிறுநீரகங்கள் உள்ளன. இதில் விசித்திரம் என்னவென்றால், அவற்றில் 1 மட்டுமே செயல்படுகிறது. அவரின் 2 சிறுநீரகங்களும் செயலிழக்க, அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து 2 சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டன. பின்னர், அவையும் செயலிழக்க, மீண்டும் சிகிச்சை செய்து புதியதாக ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. மெடிக்கல் மிராக்கல்!
News February 22, 2025
கேரள பாஜக தலைவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுப்பு

தொலைக்காட்சி விவாதத்தில் இந்திய முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் எனக்கூறிய கேரள பாஜக தலைவர் PC ஜார்ஜுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இதே போன்ற வழக்கு ஒன்றில் கடந்த 2022இல் வழங்கப்பட்ட ஜாமின் நிபந்தனைகளை மீறி, மீண்டும் அவதூறு கருத்துக்களை தெரிவிக்கும் இவருக்கு முன்ஜாமின் வழங்கினால், அது மக்களிடம் தவறான செய்தியை கொண்டு செல்லும் எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.