News February 19, 2025
தமிழ்.. தமிழ்.. 60 ஆண்டாக பேச மட்டுமே செய்கின்றனர்: R.N.ரவி

TN அரசியல்வாதிகள், தமிழ் தமிழ் எனப் பேச மட்டுமே செய்வதாக R.N.ரவி விமர்சித்துள்ளார். 60 ஆண்டுகளாகவே தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எவ்வித சேவையையும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், பாரதியார், கம்பர், வால்மீகி போன்றோரை பற்றி பேசுகிறோம்; போற்றுகிறோமா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழின் பெருமையை பின்பற்றி நாம் பயணிக்கிறோமா என்பதும் கேள்விக்குறியே எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 21, 2025
கடைசி வரை போராடிய ரஹ்மத் ஷா

<<15538512>>CT<<>> கிரிக்கெட்டில் தெ.ஆப்பிரிக்க அணிக்கு கடைசி வரை ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன் ரஹ்மத் ஷா சிம்ம சொப்பனமாக இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த போதிலும், ரஹ்மத் ஷா அணிக்காக மல்லுக்கட்டினார். அரைசதம் அடித்த அவர், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 90 ரன்களில் அவர் அவுட் ஆனார். இத்துடன் ஆப்கானிஸ்தான் அணியும் சுருண்டது.
News February 21, 2025
BBC தொலைக்காட்சிக்கு ரூ.3.44 கோடி அபராதம்

அந்நிய செலாவணி சட்டவிதி மீறல்களுக்காக பிபிசி டி.வி.க்கு அமலாக்கத்துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது. அதேபோல், பிபிசி டி.வி. இயக்குநர்கள் 3 பேருக்கு தலா ரூ.1.14 கோடி அபராதம் செலுத்தவும் அமலாக்கத்துறை ஆணையிட்டுள்ளது. செய்தி ஒளிபரப்பும் நிறுவனங்களில் FDI உச்சவரம்பு 26%ஆக குறைக்க வேண்டும் என்ற விதிக்கு மாறாக 100% முதலீட்டுடன் பிபிசி இந்தியா டி.வி. செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
News February 21, 2025
உயிரைப் பறித்த Butterfly Challenge: பெற்றோருக்கு எச்சரிக்கை!

பிரேசிலில் 14 வயது சிறுவன் டாவி, ஆன்லைன் சேலஞ்சில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளான். பட்டாம்பூச்சியை கொன்று, தூளாக்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்வதே, பட்டர்பிளை சேலஞ்ச். இதை பார்த்து டாவியும், காலில் ஊசிமூலம் செலுத்திக் கொண்டான். அதன்பின் ஊசி குத்திய இடம் செப்டிக் ஆனதாலும், பட்டாம்பூச்சி உடலில் இருந்த நச்சுகளாலும் அவனின் உடல்நலம் பாதிக்கப்பட, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.