News February 19, 2025
பரங்கிக்காயில் பல்லாயிரம் மருத்துவ குணங்கள்!

*பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிகமுள்ளதால் கண்களுக்கு நல்லது.
*ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை பரங்கிச்சாறு போக்கும்.
*பரங்கிச்சாறோடு சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
*உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பரங்கிக்காய் போக்கும்.
*ரத்த சோகையை குணப்படுத்தும் பண்பு பரங்கிக்காயிடம் உண்டு.
Similar News
News February 22, 2025
கட்சி நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை

மாமல்லபுரத்தில் வரும் 26ஆம் தேதி TVK பொதுக்குழு கூட்டம் நடைபெறும் விடுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். விஜய்யின் பாதுகாப்பு குறித்து, பவுன்சர்களிடமும், கட்சி நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், எப்போது அந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
News February 21, 2025
அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும்: IMD

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. அதாவது, நாளையும், நாளை மறுதினமும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஆனால், அதற்கடுத்த 2 நாள்களுக்கு இயல்பை ஒட்டி காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
News February 21, 2025
கடைசி வரை போராடிய ரஹ்மத் ஷா

<<15538512>>CT<<>> கிரிக்கெட்டில் தெ.ஆப்பிரிக்க அணிக்கு கடைசி வரை ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன் ரஹ்மத் ஷா சிம்ம சொப்பனமாக இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த போதிலும், ரஹ்மத் ஷா அணிக்காக மல்லுக்கட்டினார். அரைசதம் அடித்த அவர், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 90 ரன்களில் அவர் அவுட் ஆனார். இத்துடன் ஆப்கானிஸ்தான் அணியும் சுருண்டது.