News March 29, 2024
ஐடி நோட்டீஸ் அனுப்பியிருப்பது வரி தீவிரவாதம்

ரூ.1,823 கோடி செலுத்தக்கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பதை வரி தீவிரவாதம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 2017-18 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் முறையாக வரி செலுத்தாத காரணத்துக்காக வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,823 கோடி செலுத்தக்கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், வரி தீவிரவாதம் என விமர்சித்துள்ளார்.
Similar News
News March 21, 2026
மாறும் ட்ரெண்ட்: ஹிட்டடிக்கும் சிறு பட்ஜெட் படங்கள்!

OTT வருகைக்கு பிறகு, பெரிய ஹீரோ படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதாக நிலவிய கருத்து உடைந்து வருகிறது. சிறை, TTT, தாய் கிழவி, வித் லவ், யூத் போன்ற சின்ன பட்ஜெட் படங்களின் வெற்றியே இதற்கு சாட்சி. கோடிகளை வாரி இறைத்தாலும், கன்டென்ட் தான் ரசிகர்களை ஈர்க்கிறது என்பதை கோலிவுட் உணர வேண்டிய தருணம் இது. வரும் காலங்களில் கதைக்கான முக்கியத்துவமும் கூடும் என நம்புவோம். நீங்க என்ன சொல்றீங்க?
News March 21, 2026
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது

புதுச்சேரியில் NDA கூட்டணியில் பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மண்ணாடிபட்டு – நமசிவாயம், ஊசுடு – தீப்பாய்ந்தான், முதலியார் பேட்டை – ஜான்குமார், காலப்பேட்டை – கல்யாணசுந்தரம், ராஜ்பவன் -ராமலிங்கம், மணவேளி – செல்வம், திருநள்ளாறு- ராஜசேகரன், மாஹே – தினேஷன், T.R பட்டினம் – மீனாட்சி சுந்தரம் போட்டியிடுகின்றனர்.
News March 21, 2026
QR code-ஐ கண்டுபிடித்தவரை பற்றி தெரியுமா..?

டிஜிட்டல் புரட்சிக்கு காரணமான QR code-ஐ கண்டுபிடித்தவர் ஜப்பானின் மாசாஹிரோ ஹரா. கார் கம்பெனியில் வேலை பார்த்த இவர், கார் Spare parts தகவல்களை கூடுதலாக, சேமிக்க வடிவமைத்ததே QR code. ஜப்பானின் ‘Go’ என்ற போர்ட் கேமின் டிசைன்தான் இவருக்கு inspiration. 1994-ல் QR code-ஐ வடிவமைத்த ஹரா, தற்போது உலகம் முழுக்க தனது கண்டுபிடிப்பு பயன்படுத்தப்பட்டாலும், அதற்காக காப்புரிமையோ, பணமோ கேட்டதில்லையாம்.


