News February 19, 2025

ஆற்றுப்படுத்துனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

image

நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்குவதற்கு உளவியல் கல்வியில் முதுகலை பட்டம் பெற்ற தகுதியானவர்கள் ஆற்றுப்படுத்துனர் பதவிக்கு வருகின்ற மார்ச் 5ஆம் தேதிக்குள் மாவட்ட நன்னடத்தை அலுவலரிடம் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News August 13, 2025

மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம்; ம்னுக்களை பெற்ற எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் சு. செல்வக்குமார் பொதுமக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து 20 மனுக்களை பெற்றுக்கொண்டார். பின் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதில், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News August 13, 2025

கால்நடை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்!

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ். கீழ்வேளுர் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியங்களில் 50% மானியத்தில் ஏழை கால்நடை விவசாயிகளுக்கு சினையுற்ற கறவை பசுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவர் மூலமாகவும், மற்றும் துணை பதிவாளர் பால் உற்பத்தியாளர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாமென மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

நாகை புத்தகத் திருவிழா; ரூ.1.30 கோடிக்கு புத்தக விற்பன!

image

நாகையில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா கடந்த ஆக.1ம் தேதி தொடங்கி ஆக.11ம் தேதி வரை நடைப்பெற்றது. இதில், 105 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு இலக்கியம், புதினம், வரலாறு என பல்வேறு வகையான புத்தகங்கள் பதிப்பாளர்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் இத்திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ரூ.1.30 கோடி மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!