News February 18, 2025

பாலியல் குற்றச்செயல்களுக்கு கஞ்சாவே காரணம் – அன்புமணி

image

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் தான் காரணம். அதன் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை என்று கூறியுள்ளார்.

Similar News

News September 24, 2025

விழுப்புரத்தில் சொத்து தகராறில் சித்தி கொலை

image

விழுப்புரம் மாவட்டம், துறிஞ்சிப்பூண்டியில் கிணற்றில், முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. போலீசார் விசாரணையில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்தது, ஜெயக்கொடியின் கணவரான பழனிவேலுவின் முதல் மனைவியின் 2வது மகனான பிரகாஷ்ராஜ் என்பதும் தெரியவந்துள்ளது. சொத்துத் தகராறில் தனது சித்தியை அடித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

News September 24, 2025

10.5% இட ஒதுக்கீடு: டிசம்பரில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக முழுவதும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெறும் என விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News September 24, 2025

விழுப்புரம்: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் போராட்டம்

image

விழுப்புரம் தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில் இளைஞர்களைக் கொண்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இந்தப் போராட்டங்கள் நடக்கும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அன்புமணி டிச.17 சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், ராமதாஸின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!