News February 18, 2025

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை உயர்வு

image

சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை உயர்த்தி வங்கிகள் அறிவித்துள்ளன. அதன்படி, SBI வங்கி கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்பாக ₹3,000 வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது ₹5,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. PNB வங்கி குறைந்தபட்ச கையிருப்பை ₹1,000ல் இருந்து ₹3,500ஆகவும், கனரா வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை ₹1000ல் இருந்து, ₹2,500 ஆகவும் உயர்த்தியுள்ளது.

Similar News

News September 13, 2025

BCCI தலைவர் ரேஸில் இணைந்த ஹர்பஜன்

image

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை BCCI-ன் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களால் முன்மொழியப்பட்டவர்களே BCCI தலைவருக்கான தேர்தலில் போட்டியிட முடியும். ஹர்பஜன் சிங் இதுவரை இந்திய அணிக்காக 367 சர்வதேச போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். வரும் 28-ம் தேதி BCCI தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

News September 13, 2025

ஒவ்வொரு மாதமும் ₹9,250 கிடைக்கும்; அடடே திட்டம்!

image

ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வட்டியாக கொடுக்கிறது போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமான திட்டம். இத்திட்டத்தில், ₹1 லட்சம் – ₹15 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு, ₹15 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹9,250 வருமானமாக கிடைக்கும். 5 ஆண்டுகள் கழித்து திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் நீங்கள் செலுத்திய ₹15 லட்சம் உங்களுக்கு திருப்பிக்கொடுக்கப்படும். SHARE.

News September 13, 2025

அனுஷ்காவை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி விலகல்

image

சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ஐஸ்வர்யா லட்சுமி அறிவித்துள்ளார். தனக்காக SM வேலை செய்யும் என்று நினைத்தேன், ஆனால் அதற்காக நான் வேலை செய்வதாகிவிட்டதாக கூறியுள்ளார். இன்றைய காலத்தில் இன்ஸ்டாவில் இல்லையென்றால் யார் நினைவிலும் இருக்க மாட்டேன் என்பது தெரிந்தும், ரசிகர்களை நம்பி திரையில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று முதல் அனுஷ்காவும், SM-க்கு தற்காலிக லீவ் கொடுத்திருந்தார்.

error: Content is protected !!