News February 18, 2025
மாணவியை வன்கொடுமை செய்த 7 மாணவர்கள் கைது

கோவையில் 17 வயது கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 7 மாணவர்களை போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர். சோசியல் மீடியாவில் மாணவியிடம் பழகிய மாணவர்கள், அவரை குனியமுத்தூர் வரவழைத்து அறையில் அடைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 7, 2026
ஈரான் போர் நீடித்தால் இந்தியாவுக்கு பாதிப்பு: SBI

ஈரான் உள்ளிட்ட மேற்காசிய பகுதியில் மோதல் நீண்ட காலம் நீடித்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று SBI-ன் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. எண்ணெய் விலை $130/பேரல் வரை உயர்ந்தால் FY27-ல் (2026-27) GDP வளர்ச்சி 7% லிருந்து 6% ஆக குறையும் என்று எச்சரிக்கிறது. வளைகுடா நாடுகளிலிருந்து வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் பணம் மற்றும் வர்த்தகம் தடைப்படுவது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்.
News March 7, 2026
தலைமுடியை மென்மையாக்க சில டிப்ஸ்!

➤தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து முடியின் வேர் வரை தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும் ➤சல்பேட் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுங்கள் ➤ஹேர் டிரையர்கள், ஸ்ட்ரைட்னர்கள் போன்ற வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் ➤பிளாஸ்டிக் சீப்புகளுக்கு பதிலாக மர சீப்புகளை பயன்படுத்தலாம் ➤வாரத்திற்கு 2 முறை எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். SHARE THIS.
News March 7, 2026
ஜன நாயகன் படம்.. வெளியானது UPDATE

சென்சார் பிரச்னையில் சிக்கிய ‘ஜன நாயகன்’ படத்தின் நிலவரம் என்னவானது என்றே தெரியாமல் இருந்தது. இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை மறுநாள் (மார்ச் 9) மதியம் 2 மணிக்கு படத்தை பார்க்கவுள்ளதாம். இதனையடுத்து, 20 நாள்களில் படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்பட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணி தொடங்கும். விஜய் ரசிகர்களே, ரெடியா!


