News February 18, 2025
ஷுப்மன் கில்லின் ஹிஸ்ட்ரி அப்படி!

சமீப ஆண்டுகளாகவே ODIகளில் ஷுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2022ல், 47 போட்டிகளில் விளையாடி, 7 சதங்கள், 15 அரை சதங்கள் என 2,538 ரன்களை எடுத்தார். 2023ல், அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 1,584 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார். அண்மையில் ENGக்கு எதிரான 3 போட்டிகளில், 1 சதம், 2 அரைசதங்கள் என 259 ரன்களை குவித்தார். அதனால் CTல் அவர் மிகுந்த மதிப்புமிக்க வீரராக கருதப்படுகிறார்.
Similar News
News September 13, 2025
கூச்சல், கும்மாளம்: விஜய்யை அட்டாக் செய்த CM ஸ்டாலின்

விஜய்யின் சுற்றுப்பயணத்தில் திருச்சியே திண்டாடிபோயுள்ளது. இந்நிலையில், கொள்கையில்லா கூட்டத்தைச் சேர்த்து, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என CM ஸ்டாலின் விஜய்யை சாடியுள்ளார். திமுக முப்பெரும் விழாவுக்காக தொண்டர்களுக்கு அழைப்பு மடல் எழுதிய அவர், பழைய எதிரிகள்-புதிய எதிரிகள் என எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டு பார்க்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 13, 2025
உலக தடகள சாம்பியன்ஷிப்: மெடல் குவிக்குமா இந்தியா?

உலக தடகள சாம்பியன்ஷிப், ஜப்பானின் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்.21 வரை நடைபெறும் இந்த தொடரில் 198 நாடுகளைச் சேர்ந்த 2,200 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து நீரஜ் சோப்ரா, முரளி ஸ்ரீசங்கர், குல்வீர் சிங், அங்கிதா தியானி, பூஜா உள்பட 19 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். குறிப்பாக, ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பதக்கங்கள் குவிக்க வாழ்த்துகள்!
News September 13, 2025
‘MLA திருட்டு’ பற்றி ராகுல் வாய் திறப்பாரா? ராமா ராவ் கேள்வி

வாக்கு திருட்டை பற்றி பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் BRS கட்சியிலிருந்து காங்., கட்சி, MLA-க்களை திருடுவது பற்றி மௌனம் காப்பது ஏன் என கே.டி. ராமா ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், மக்கள் பிரச்னைகளை காட்டிலும் MLA-க்களை திருடுவதில் தான் மாநில காங்., அதிக கவனம் செலுத்துவதாகவும் சாடியுள்ளார்.