News February 18, 2025
கும்பமேளாவுக்காக சாகசம்: 1,400 கி.மீ BIKE RIDE

கும்பமேளாவுக்கு செல்வது அவ்வளவு ஈஸி இல்லை. ரயில்களில் டிக்கெட் கிடைக்காது, ஹைவேக்களில் டிராஃபிக், விமானப் பயணம் காஸ்ட்லி. சோ, மாற்றி யோசித்த மும்பை தம்பதி அர்பித் – ஷிவானி பைக்கிலேயே புறப்பட்டனர். மொத்தம் 1,400 கிமீ தூரத்தை பைக்கிலேயே கடந்துள்ளனர். களைப்பு, தூக்கம் என இடர்கள் இருந்தாலும் கும்பமேளாவுக்காக ரிஸ்க் எடுக்கலாம் என்கிறார் ஷிவானி. உங்கள் கருத்து என்ன கமெண்ட் செய்யுங்கள்.
Similar News
News September 13, 2025
‘MLA திருட்டு’ பற்றி ராகுல் வாய் திறப்பாரா? ராமா ராவ் கேள்வி

வாக்கு திருட்டை பற்றி பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் BRS கட்சியிலிருந்து காங்., கட்சி, MLA-க்களை திருடுவது பற்றி மௌனம் காப்பது ஏன் என கே.டி. ராமா ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், மக்கள் பிரச்னைகளை காட்டிலும் MLA-க்களை திருடுவதில் தான் மாநில காங்., அதிக கவனம் செலுத்துவதாகவும் சாடியுள்ளார்.
News September 13, 2025
நச்சுன்னு 10 படம்: நடிகை திவ்யபாரதியின் ஆசை

‘பேச்சுலர்’ படம் மூலம் அறிமுகமான திவ்யபாரதி, பேச்சுலர்களின் மனதை தனது கவர்ச்சி போட்டோஸால் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். இதனிடையே, ‘மகாராஜா’ படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்த அவர், அடுத்து தலைகாட்டவில்லை. அடுத்த படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில், தனது முதல் 10 படங்களை சிறப்பாக கொடுக்க வேண்டும் என நினைப்பதால், பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்வதாக கூறியுள்ளார்.
News September 13, 2025
ரயிலில் இருந்து ஃபோனை தவறவிட்டா என்ன செய்றது?

உங்கள் ஃபோன் விழுந்த இடத்தில் இருக்கும் கம்பத்தின் எண்ணையும், எந்த ஸ்டேஷனில் உங்கள் ஃபோன் விழுந்தது என்பதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உடனடியாக Railway Helpline-க்கு (182, 139) தொடர்பு கொண்டு இதை தெரிவித்தால் ரயில்வே போலீசார் உங்களுடைய ஃபோனை மீட்டுவிடுவர். பிறகு அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் ஃபோனை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த முக்கியமான தகவலை பிறருக்கு SHARE செய்யுங்கள்.